இன்றைய ராசி பலன் | Indraya rasi Palan -26.12.2024

இன்றைய ராசி பலன்

மேஷம்

indraya rasi palan

உங்களுக்கு சுபசெலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கடன்கள் சற்று குறையும்.

ரிஷபம்

indraya rasi palan

உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.

மிதுனம்

indraya rasi palan

உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். எதிலும் கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். கடன் பிரச்சினை ஓரளவு தீரும்.

கடகம்

indraya rasi palan

உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை குறைக்கலாம். பணவரவு சுமாராக இருக்கும்.

சிம்மம்

indraya rasi palan

நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி

indraya rasi palan

உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகளால் சிறு சிறு மனகஷ்டங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில உதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

துலாம்

indraya rasi palan

உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.

விருச்சிகம்

indraya rasi palan

உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு

indraya rasi palan

வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

மகரம்

indraya rasi palan

உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்பம்

indraya rasi palan

உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல் உண்டாகும். எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில தடங்கல்கள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மீனம்

indraya rasi palan

உங்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். வெளியே பயணம் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top